புதுச்சேரியில் ஆளுநரால் ஆட்சி மாற்றம் என எதிர்கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு- தமிழிசை

0
52

புதுச்சேரியில் ஆளுநரின் துணையுடன் ஆட்சி மாற்றம் நடத்த இருப்பதாக எதிர்கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய வணிக அவை மற்றும் தொழிகூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைக்கவே அமித்ஷா புதுச்சேரிக்கு வருகிறார் எனக் கூறினார். அமித் ஷா வருகையால் புதுச்சேரி வளர்ச்சி பெறும் எனத் தெரிவித்த அவர், அமித்ஷாவின் வருகைக்கு எதிராக குரல்கொடுப்பவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுதாகவே அர்த்தம் எனக்கூறினார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்