புதுமனை புகுவிழா வீட்டில் விளக்கு அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பரிதாப பலி

0
30

திருத்தணி: புதுமனை புகுவிழா வீட்டில் அலங்கார விளக்கு அமைக்கும்போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். திருத்தணி அடுத்த மத்துார் காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிஷோர் (17). இவர் மத்துார் அரசினர் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார். தற்போது விடுமுறை என்பதால் கிஷோர் தனது உறவினர் ஒருவருடன் திருவிழா மற்றும் புதுமனை புகுவிழா நடக்கும் வீடுகளுக்கு மின்விளக்குகள் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இதன்படி, நேற்றுமுன்தினம் இரவு மத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பிதுரை என்பவர் கட்டிய புதுவீட்டுக்கு மின் விளக்குகள் அலங்காரம் செய்வதற்காக கிஷோர் சென்றிருந்தார். அப்போது, வீட்டின் மாடியின் மீது அலங்கார விளக்குகள் அமைக்கும் போது எதிர்பாராதவிதமாக அருகே சென்ற மின்வயர் அறுந்து கிஷோர் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கிஷோர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ‘’மாணவன் கிஷோர் ஏற்கனவே இறந்துவிட்டார்’ என்று தெரிவித்தார். இதனால் உறவினர்கள் கதறி அழுதனர்.இதுபற்றி திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய் விசாரிக்கின்றனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்