பேசு பொருளான டெஸ்லா…(TESLA)

0
302

பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’ நிறுனவத்தை தங்கள் மாநிலத்திற்கு வந்து தொழில் தொடங்குமாறு இந்தியாவின் பல மாநிலங்கள் வரிந்து கட்டிக் கொண்டு போட்டி போடுகின்றன. அதிலும் குறிப்பாக “தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தெலுங்கானா” போன்ற மாநிலங்களின் தொழிற்துறை அமைச்சர்கள், தங்கள் மாநிலத்திற்கு டெஸ்லா நிறுவனத்தை அமைக்க வருமாறும் அதன் மூலம் நல்ல தொழில் முன்னேற்றத்தைக் காணலாம் என்றும் டெஸ்லா நிறுவனத் தலைவர் “எலன் மஸ்க்கை” டுவிட்டரில் டேக் செய்துள்ளனர்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் அமைப்பதற்கான ஏற்ற சூழ்நிலையும், இடவசதியும் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டு எலன் மஸ்க்கை டுவிட்டரில் டேக் செய்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:
தமிழ்நாட்டின் சென்னையில் துறைமுகத்தைச் சுற்றி போக்குவரத்து வசதிக்காக 150 கிலோ மீட்டருக்குள் உலகின் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்திருப்பதாகவும் அவற்றில் “Ford, Mahindira, Hundai, BMW” போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.


அருகிலேயே விமான நிலையம், துறைமுகம் என முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. மேலும் சென்னை அருகே திருவள்ளூரில் 300 ஏக்கர் பரப்பளவில் “தொழிற் பூங்கா” அமைக்க தமிழக அரசு இடம் ஒதுக்கியிருக்கிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தொழில் தொடங்க தமிழகமே சிறந்த தேர்வாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்