மதுரையில் இந்திரன் கோட்டம் சார்பில் முப்பெரும் இலக்கிய விழா

0
348

ஜன.20 2022;

மதுரை:
மதுரையில் இன்று இந்திரன் கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்திரன் கோட்டம் மாத இதழ் வெளியீடு
மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக
பாஜக மாநில பொது செயலாளர் முனைவர் பேராசிரியர் திரு.இராம சீனிவாசன் அவர்களும்,
கல்வியாளர் முனைவர் திரு அ.குணசேகரன் அவர்களும் திரு.மா.கிருஷ்ணசாமி (Iஆர்எஸ்) அவர்களும் இந்திரன் கோட்டம்
மாத இதழின் பொறுப்பாசிரியர் முனைவர் திரு.சு.பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
விழாவை இந்திரன் கோட்டம் நிறுவனர் முனைவர் திரு.ஞானசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழர் தேசிய பேரவையின் நிறுவனர் திரு. மாமல்லர் கபிலன், தமிழர் மீட்புக் களத்தின் நிறுவனர் திரு. கரிகால மள்ளன், மள்ளர் பேராயத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன்
அவர்களும் பட்டியல் மாற்ற இயக்கத்தின் தலைவர் திரு.ந. கண்ணுச்சாமி
தொழிலதிபர் திரு.ஸ்டாலின், சமுக ஆர்வலர் திருமதி நந்தினி மள்ளத்தி
ஆகியோருடன் எண்ணற்ற பேராசிரியர்களும் சமுக ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள்,
இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இந்திரன் கோட்டம் சார்பில் நூல்கள் வெளியீடு செய்யப் பட்டது.


மதுரை
ஆ.அருண்பாண்டியன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்