மல்யுத்தம் செய்த ஆசிரியரும் ,தலைமை ஆசிரியரும் சமூக ஊடகங்களில் பரவும் குஸ்தி காணோளி.

0
310

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், கடலாடி, தலைமை ஆசிரியர் அண்ணாமலை, மற்றும் சக

பள்ளி ஆசிரியரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு அறத்தையும் கல்வியும் ஒழுக்க நெறிகளையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி கட்டிப்புரண்டு சண்டை யிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டு அவர்களின் புனிதமான ஆசிரியர் பணிக்கு களங்கம் விளைவிக்கும் அளவிற்கு இந்த செயலை செய்ததை சமூக ஊடங்களில் பலர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பரவவே முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் கவனத்திற்கு சென்று அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களை விசாரித்த பொழுது ஆசிரியர் விடுப்பு எடுப்பதற் தலைமையாசிரியர் அனுமதி அளிக்காமல் அலட்சியப்படுத்திய தாகவும் அதை தட்டிக் கேட்ட பொழுது அவர்கள் அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தில் கைகலப்பாக மாறியது தெரிவிக்கப்பட்டது சக ஆசிரியர்கள் சண்டையிடுவதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தும் கைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடங்களில் பரவ விட்ட ஆசிரியர் மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இப்படி ஒழுக்கம் இல்லாமல் சண்டை இடும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்றுத் தருவார்கள் என்று பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பெ. சூர்யா ,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்