மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை

0
233

[1:03 PM, 1/25/2022] மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மொழிப்போர் தியாகிகளின் மணிமண்டபத்தில் தியாகிகள் படத்தினை ஒவ்வொன்றாக தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார்.


1938 ஜனவரி இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி இந்தி மொழியை கட்டாயம் என அறிவித்தார்.அப்பொழுது எழுந்த கிளர்ச்சி போராட்டத்தில் கும்பகோணம்-தை சார்ந்த நடராஜர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு தாளமுத்து என்பவரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மன்னிப்பு கடிதம் கோரினால் இருவரும் விடுதலை செய்யப்படலாம் என்று அறிவித்த பொழுது மன்னிப்புக் கடிதம் கொடுக்க மாட்டோம் சிறையிலேயே மாண்டு போக தயார் என்று கூறி நடராஜரும் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தனர். பின்பு போராட்டம் உச்சத்தை அடைந்தது. போராட்டம் வெகுவாக தீவிரமடைந்ததையடுத்து ரானுவம் வரவழைக்கப்பட்டும் கட்டுபடுத்த முடியாததால், அடுத்து 1940-ல் ஹிந்தி கட்டாயம் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது

. பின்னர் 1965-இல் லால் பகதூர் சாஸ்திரி இந்திய பிரதமராக இருந்த பொழுது மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பு. அப்பொழுது நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் தீக்குளித்தும் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் தாக்குதலில் பலரும் உயிரிழந்தனர். மக்களின் தொடர்ந்து எழுந்த கிளர்ச்சி போராட்டத்தில் அரசாங்கம் இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழியும், ஆங்கிலமும் வழக்கு மொழியாக இருக்கும் என்று அறிவித்து இந்தி எதிர்ப்பு கட்டாயம் என்ற அறிவிப்பை கைவிட்டது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் நாள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் மாவட்டச் செயலாளர்களும், கட்சி பிரமுகர்களும் ஆங்காங்கே தமிழகத்தின் பல பகுதிகளில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்

சூரிய பிரகாஷ்,

நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்