மோடி வருகை : போக்குவரத்தில் மாற்றம் பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் காவலர்கள்

0
109

தமிழகத்தில் ரூபாய் 33, 500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு செல்கிறார்.

அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கில் மாலை 5.45 மணி அளவில் வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நிறைவடைந்த 5 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிலையில் சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. 5 கூடுதல் காவல் ஆணையர் 8 இணை ஆணையர்கள் 29 துணை ஆணையர்கள் 80 உதவி ஆணையர்களும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

பிரதமர் மோடி கார் செல்லும் சாலையில் 5 அடிக்கு ஒரு காவலர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறார். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோடி செல்லும் சாலையை சோதனை இடுகின்றனர்.

பாதுகாப்பு கருதி பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் பெரியமேடு ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி வரும் நேரத்தில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் விமான நிலையத்திற்கு சென்று அடையும் வரை கடைகளை மூட சென்னை காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் நிகழ்வு முடிந்து சாலை வழியாக விமான நிலையத்திற்கு பிரதமர் செல்வதால் கார் செல்லும் சாலைகளில் கடைகளை மூடுமாறு வியாபாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதில் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பெரியமேடு பகுதியில் உள்ள சாலைகள் சாலை ஜிஎஸ்டி சாலை அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் மெதுவாக செல்ல முடியும் என்பதால் மாற்று சாலைகளை பயன்படுத்தும்படி பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இரவு நிகழ்வு முடிந்த பிறகு நேரு விளையாட்டு அரங்கில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலைகள் அனைத்தும் பிரதமர் செல்வதற்காக பிற வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்