“யுடியூபர் மாரிதாஸ்” மீதான வழக்கு ரத்து – “உயர்நீதிமன்றம்”..

0
328

பிரபல யுடியூபரான மாரிதாஸ் என்பவர் திமுக மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக யுடியூபில் செய்திகளைப் பதிவிட்டதாகக் கூறி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.தூத்துக்குடி “திமுக நிர்வாகி உமரிசங்கர்” என்பவர் மாரிதாஸ் மீது இந்த அவதூறு வழக்கைத் தொடுத்தார். இந்த நிலையில், தான் திமுக வைப் பற்றி எந்த இடத்திலும் அவதூறு பரப்பும் நோக்கில் செய்திகளைப் பதிவிட்டதில்லை, ஆகையால் என் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டுமென மாரிதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இன்றி யுடியூபர் மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்