லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

0
259

[19/01/2022] பிரபல இந்திய தொழிலதிபரான ‘விஜய் மல்லையா’ இந்தியாவின் பவல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்குத் தப்பிச் சென்றார்..

இதனால் இந்திய அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்கள் மத்திய அரசால் முடக்கப்பட்டன.
இந்ந சூழ்நிலையில் இங்கிலாந்து நீதிமன்றம் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவிற்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது..

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான சொகுசு பங்களா மீது அவர் ‘சுவிஸ் வங்கியில் சுமார் 185 கோடி ரூபாய் வரை கடன்’ பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தாததால் 2017 ஆம் ஆண்டு விஜய் மல்லையா மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பானது:
[கடனைத் திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா அவருக்குச் சொந்தமான சொகுசு பங்களாவிலிருந்து குடும்பத்துடன் உடனடியாக வெளியேற வேண்டும்.மேலும் பங்களாவை சுவிஸ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்]. இவ்வாறு இருந்தது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்