வடகொரியாவின் ஏவுகனை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

0
243

2002-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணை வடகொரியா சோதித்து பார்த்தபோது அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான்-னுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Two pictures of North Korea's missile launch and two of Earth taken from the missile in space

கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே பல ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து வருகிறது. குறிப்பாக2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வடகொரியஅரசு சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஒரே மாதத்தில் வடகொரியா இரண்டாவது முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்து பார்த்து அதில் ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய வகையில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனையை செய்து பார்த்துள்ளனர். தென்கொரியாவின் வடக்கு கடற்கரை இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சுமார் அரை மணிநேரம் எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் பறந்து அண்டை நாடுகளாக ஜப்பானும் தென் கொரியாவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹுவாசாங்-12 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்க்க போட்டிருப்பதாக அதிகாரபூர்வ ஊடகங்களில் படத்துடன் தகவல்கள் வெளியிடப்பட்டது. இது ஒரே மாதத்தில் வடகொரியா சோதித்து பார்த்து இருக்கும் 7-வது ஏவுகனை சோதனையாகும்.

வடகொரியாவின் அடுத்தடுத்த ஏவுகனை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் வடகொரியாவுக்கு அமெரிக்கா ஜப்பான், தென்கொரிய அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெ .சூர்யா , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்