மக்களிடம் நேரிடையாக வாக்கு கேட்க முதல்வர் பயப்படுகிறார்- பாஜக அண்ணாமலை

0
255

மக்களிடம் நேரிடையாக வாக்கு கேட்க முதல்வர் பயப்படுகிறார்- பாஜக மாநி அண்ணாமலை

மயிலாடுதுறை : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க பயப்படுகிறார் என மயிலாடுதுறையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசுகையில்,” திமுகவின் 8 மாதகால ஆட்சிமீது மக்களுக்கு இருக்கும் கோபம்; அதிகமாக இருக்கிறது, எந்த ஒரு விஷயத்தை எடுத்துபார்தாலும் திமுக அரசு மக்கள் நலனை சாதார ஒரு அரசாக உள்ளது என்றார்.

அண்ணாமலை
பாஜக அண்ணாமலை
தொடர்ந்து பேசிய அண்ணாமலை,’ 517 தேர்தல் வாக்குறுதிகளை அளித்த திமுக 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கை பார்க்கும்போது திமுக அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பாளர்களின் தலையிடு அதிகமாக உள்ளது. காவல்துறையினரை சரியாக செயல்பட விடவில்லை. இந்த ஆட்சியில் எந்த ரேஷன்கடைகளில் எந்த ஒரு பொருளும் தரமாக வழங்கப்படவில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதைபோல் மக்கள் நலனை சாராத அரசாக திமுக உள்ளதற்கு உதாரணம் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள ஊழல் தரமற்ற பொருட்களை வழங்கி மக்கள் விரோதத்தை பெற்றுள்ளது.
மக்களை சந்திக்க பயம்
தமிழக மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட உள்ளனர். தமிழக முதல்வர் ஏன் மக்களை சந்தித்து ஓட்டுகேட்கவில்லை. வெளியே வந்து எந்த மக்களையும் பார்த்து, தேர்தல் பிரச்சாரத்தை செய்யாத முதல்வராக மாறியிருக்கிறார். வெளியே வந்து மக்களை சந்திக்க, சகோதர, சகோதரிகளை சந்திக்க பயம். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் தருவதாக கூறியது எங்கே. நகை கடன் தள்ளுபடி எங்கே. 73 சதவீத பெண்களுக்கு நகைகடன் தள்ளுபடி இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த காரணங்களுக்காத்தான் வெளியில் வந்து பிரச்சாரம் செய்யாமல் காணொளி மூலம்பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்.

நகராட்சி, பேரூராட்சிக்கு வரும் நிதியில் 85 சதவிகித நிதி மத்திய அரசு கொடுக்கின்ற நிதி;. பல்வேறு திட்டங்களாக மக்களுக்கு வந்தடையும். அனைத்து மத்திய அரசு திட்டங்;களும் உள்ளாட்சி மூலமாகத்தான் மக்களுக்கு வந்தடைகிறது. உங்களுடைய வாக்கு பாஜவுக்கு அளித்தால் எந்தவித ஊழல் இல்லாமல் நேரடியாக உங்களுக்கு வந்தடையும் என்றார். மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழைஎளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறியுள்ளது.


தனியார் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் திமுக எதிர்க்கிறது. 2006-2011 திமுக ஆட்சியில் இருந்தபோது 14 தனியார் மருத்துவக்கல்லூரிக்கு வாய்ப்பு கொடுத்தது. திமுக எம்.எல்.ஏ., எம்.பிக்கள் வைத்துள்ளனர். அரசு கொள்கை முடிவு தனியார் மருத்துவக்கல்லூரிக்கு பதிலாக அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டுமென்றால் பிரதமர் மோடி தமிழகத்தில் ஒரே நாளில் 11 அரசு மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்தார். இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும்’ என அண்ணாமலை பேசினார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்