10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

0
153

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த அவர், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும். கொரோனா பெருந்தொற்றால் கடந்த காலங்களில் பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்கள் இருந்ததால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் கடந்த ஆண்டு நடைபெறவில்லை.இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்ததோடு அதற்கான தேதியையும் அறிவித்தார்.

அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறுவதாகவும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுவதாகவும் இதை 9 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளதாகவும் அவர் அறிவித்தார். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31 வரை பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் இந்தத் தேர்வை 8.49 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 தொடங்கி மே 28 வரைப் பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் இந்தத் தேர்வை 8.36 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்