கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேருக்கும் தண்டனை ; யுவராஜ் மற்றும் அருண் -க்கு 3 ஆயுள் தண்டனை வழங்கியது மதுரை சிறப்பு நீதிமன்றம்.

0
363

தமிழகத்தையே உலுக்கிய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

குற்றவாளிகள் 10 பேருக்குமான தண்டனை விவரங்களை நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார். மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியது.

Madurai Special Court Today Passed Judgment In The Murder Case Of Gokulraj  Of Salem Omalur | Gokulraj Murder Case : கோகுல்ராஜ் கொலை வழக்கு : இன்று  தீர்ப்பளிக்கிறது மதுரை சிறப்பு நீதிமன்றம்

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.அதில் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்ட முதன்மைக் குற்றவாளியான யுவராஜ் 3 ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அவர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வந்துள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும் என்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நிலையில் இன்று மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதி சம்பத்குமார் யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கும் மூன்று ஆயுள் தண்டனையும்,

``பயப்படாதீங்க" என்ற நீதிபதி... அனலடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு..!

அதுபோக சாகும்வரை சிறைவாசம் வைக்கும் என்றும், குமார், சதீஷ், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய ஐந்து பேருக்கும் 2 ஆயுள் தண்டனையும், சந்திரசேகர் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், மற்றும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மேலும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

திருப்பி அளித்தபின் நீதிபதி , தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா? என கேட்டதற்கு, குற்றவாளிகள் , தாங்கள் 10 பேரும் நிரபராதிகள் என்று கூறினார்கள். அதேபோல அவர்களின் வழக்கறிஞரிடம் நீதிபதி வேறு ஏதும் வாதம் முன்வைக்க விரும்புகிறீர்களா? என கேட்டதற்கு அவர் முன்வைக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.

மேலும் அரசு வழக்கறிஞரான மோகன் கூரையில் உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்