மேற்கு வங்க மாநிலத்தில் 10 பேர் உயிரோடு எரித்து படுகொலை-பழிக்குபழியால் பதற்றம்

0
166

மேற்கு வங்க மாநிலத்தில் பிம்பம் என்ற பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவர்கள் அங்கு உள்ள 12 வீடுகளுக்கு தீவைத்தனர் வீட்டின் வெளிப்புற வாசலில் பூட்டால் பூட்டி வீட்டிற்குள் எரிபொருளை விசி தீயைவைத்து விட்டு தப்பிச் சென்றனர். இதில் வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறி துடித்து சுமார் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து மேற்குவங்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது பிரதான் என்பவர் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச்சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக 10 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்