உயர் சாதிக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது – தமிழக அரசு

0
33

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள், பல அரசியல் கட்சிகள், தனிநபர் மூலமாக நூற்றுக்கணக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் மீது இன்று நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் சட்டப்பிரிவு 14 இன்படி சமத்துவத்தைக் கடைபிடிக்க சொல்லும் ஒரு நிலைப்பாட்டை மாற்ற முடியாது எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதில் பொருளாதாரத்தை கொண்டுவருவது பிரிவு 14 இன் அடிப்படை தன்மையையே கேள்விக்குள்ளாக்குவதாக வாதம் முன் வைக்கப்பட்டது. மேலும் பொருளாதார அளவுகோலின் கீழ் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவது அரசியல் சட்டப்பிரிவு 14 ஐ அப்பட்டமாக மீறும் செயல் எனவும் தமிழக அரசு வாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்துதான் இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த வாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறுதானே இதை வகைப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தமிழக அரசு தக்க பதில் அளித்துள்ளது.

அதில் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றம் தான் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்படும் எனவும் அப்படி நடக்க வாய்ப்பில்லை எனவும் தமிழக அரசு அழுத்தம் திருத்தமாக விளக்கமளித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்