மேகதாதுவில் அணை கட்ட 1000 கோடி ரூபாயை ஒதுக்கியது கர்நாடக அரசு – துரைமுருகன் கண்டனம்.

0
176

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ரூபாய் 1000 கோடியை ஒதுக்கியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ளதை அடுத்து கர்நாடக அரசு இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பாதகமான அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர் “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும்” மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக கர்நாடக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கர்நாடகா, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் மாநில பன்முகத்தன்மைக்கும் எதிராக நடந்து கொள்வதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். பல மாநிலங்கள் பயன்படுத்தி வரும் காவிரி நீரை ஒரே ஒரு மாநிலம் மட்டும் பயன்படுத்தும் விதமாக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது தவறானது என்றும் மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசின் முயற்சிகளை முறியடிக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் எனவும் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்