ஹரியானாவில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் 105 வது பிறந்தநாள் விழா.

0
183

தீனதயாள் உபாத்தியாயா 25 செப்டம்பர் 1916 ல் பிறந்து 11 பிப்ரவரி 1968 வரை வாழ்ந்தார். இந்தியத்தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர்.

பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். இவரது பிறந்த நாள் கொண்டாட்டம் ஹரியானா மாநிலம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதில் ஒரு அம்சமாக ‘தேவேந்திரசேனா’ அமைப்பு சார்பாக துணைத்தலைவர் கல்வியாளர் அ.குணசேகர் அவர்கள் ஹரியானா மாநில முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாரிதாபாத்தின் சட்டமன்ற உறுப்பினருமான திரு விபுல்கோயல் அலுவலகத்தில் வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். அவரது தேசப்பணிகள் தொடரும்..

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்