முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10ஆம் தேதி ஆட்சியாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாடு.

0
254

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10, 11, 12 ஆம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில் ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் தலைமை ஏற்று மாநாட்டினை நடத்த வார இறுதியில் முதலமைச்சர் உரையாற்றுவதற்கு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் இணைந்து இந்த மாநாடு நடத்துவது வழக்கமாக உள்ளது இந்த ஆண்டு வருகிற 18-ஆம் தேதி சட்டமன்ற தொடரை கூட்டுவதற்காக திட்டமிடப்பட்டிருக்கிறது இருந்தாலும் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை எவ்வாறு இருக்கின்றது மாவட்ட வாரியாக நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா என்பது பற்றியும் இது போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நடைபெறக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளார் இதனையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரை அழைத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் தேதி முடிவடைந்த கூட்டத்தின் இறுதி நாளில் முதலமைச்சர் அவர்கள் இறுதி உரையாற்ற இருக்கிறார்.

அன்றைய தினத்தில் தமிழக அரசின் சார்பாக கொண்டு சேர்ந்திருக்க கூடிய நலத்திட்ட பணிகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் இதனை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்த பல்வேறு பிரச்னைகளை முதலமைச்சர் இறுதி உரையின் போது வாசிக்க உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகை யில் பத்தாவது தளத்தில் இந்த மாநாடு ஆனது நடைபெற இருக்கின்றது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அவளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கின்றது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்