குழந்தைத் திருமணத்தால் பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை..

0
170

திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 2017ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு மாணவியின் சித்தப்பாவின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. “அப்போது மாணவிக்கு 13 வயதுதான்”. மணவாழ்க்கையில் விருப்பமில்லாத மாணவி திருமணமான மூன்றே நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார். ஆகையால் மாணவியின் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த நகைகள், பொருட்களை சிவகுமார் வீட்டாரிடம் திரும்பக் கேட்டுள்ளனர். இது தொடர்பாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி கடந்த 4ஆம் தேதி குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவி குடித்து மீதம் வைத்த குளிர்பானத்தை விஷம் என்று தெரியாமல் மாணவியின் தங்கையும் எடுத்துக் குடித்துள்ளார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இருவருக்கும் மயக்கம் ஏற்படவே, இருவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவியின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தற்போது மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் காவல் நிலையத்திலும் மாணவியின் பெற்றோர், மாணவியின் சித்தப்பா, சிவக்குமார் மற்றும் சிவகுமாரின் பெற்றோர்கள் ஆகியோர் மீது “குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்” மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்