டிசம்பரில் 12 நாட்கள் பொதுவிடுமுறை அல்ல

0
155

12 நாட்கள் பொதுவிடுமுறை அல்ல என்பதையும், இது ஒவ்வொரு மாநிலத்தை சார்ந்த உள்ளூர் விடுமுறை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும், இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டது, அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் டிசம்பர் மாதத்தில் வார விடுமுறைகள் உட்பட 12 நாட்கள் மூடப்பட்டிருக்கும். 

டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் உட்பட ஏழு விடுமுறை நாட்களும் இந்திய ரிசர்வ் வங்கி  வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் மாதத்தின் நான்காவது சனிக்கிழமையில் வருகிறது. பொதுவாக வாரத்தின் 4வது சனிக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்ட விடுமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, வங்கிகளுக்கு இந்த மாதம் 12 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த விடுமுறைகள் மாநில வாரியாக இருப்பதால் 12 நாட்கள் விடுமுறை பொதுவிடுமுறை அல்ல என்பதையும், இது ஒவ்வொரு மாநிலத்தை சார்ந்த உள்ளூர் விடுமுறை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 


டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா – கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை.

டிசம்பர் 5: ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 11: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

டிசம்பர் 12: ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 18: யு சோ சோ தான் இறந்த நாள் – ஷில்லாங்கில் விடுமுறை.

டிசம்பர் 19: ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் விழா (கிறிஸ்துமஸ் ஈவ்) – ஐஸ்வால், ஷில்லாங் ஆகிய பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.

டிசம்பர் 25: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை – கவுகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.

டிசம்பர் 26: ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 27: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஐஸ்வால் பகுதியில் விடுமுறை

டிசம்பர் 30: யு கியாங் நங்பா – ஷில்லாங்கில் விடுமுறை.

டிசம்பர் 31: புத்தாண்டு ஈவ் – ஐஸ்வால் பகுதியில் விடுமுறை.

பல்வேறு மாநில வாரியான விடுமுறைகள் தவிர. சில வார இறுதி நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வார இறுதி விடுமுறை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான இயல்புடையவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்