1250 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெண் சமூகஆர்வலர்

0
332

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற சமூக ஆர்வலர் சுமார் 1250 வகையான நெல் வகைகளை மீட்டு எடுத்துள்ளார். பரம்பரிய நெல் வகைகள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்தியா முழுவதும் தேடிஅலைந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள பாரம்பரியமான நெல்வகைகளை சேகரித்து அவற்றை தனது வயலில் விளைய வைத்து அழிய விடாமல் காப்பாற்றி வருகிறார்.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகளை சேகரித்து வைத்துள்ளார் இதில் குடவாழை, மடமுழுக்கி, தங்கச்சம்பா பால்குடவாழை பஞ்சைபெருமாள் போன்ற நெல் வகைகள் அடங்கும் இவர் இவ்வாறு பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்து காப்பாற்றி வருவதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த கல்வி பயில்வோர் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து திரளாக வந்து இவரிடம் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி கேட்டு அறிந்தும் நெல் வகைகளை பெற்றும் செல்கின்றனர்.

இவர் இந்தியாவில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்ததாகவும் அவர்களில் பல ஆயிரம் வகைகள் அழிந்து விட்டதாகவும் எஞ்சி இருக்கக்கூடிய நெல் வகைகளை காப்பாற்ற இவ்வாறு இந்தியா முழுவதும் தேடிஅலைந்து பாரம்பரியமான நெல் வகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த முயற்சியில் இதுவரை 1250 வகை நெல் வகைகளை தான் சேகரித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதில் கருப்புகவுனி என்ற நெல் வகைகள் மன்னர்கள் மட்டுமே பயன்படுத்திவந்த நெல் வகையாகும். தங்கச் சம்பா மாப்பிள்ளை சம்பா போன்ற நெல் வகைகள் அதிக மருத்துவ குணம் வாய்ந்தவையாக இருக்கிறது.

நமது பாரம்பரிய நெல் வகைகளில் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு வகையான நெல்லினை சாப்பிடும் பொழுது அந்த நோய்கள் குணமாவதால் நம்முன்னோர்கள் இவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி வந்தனர் என்றும் தெரிவித்தார்.


நம் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள் :


சிவப்புக் குடவாழை, வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை…… இதெல்லாம் நம்மளோட பாரம்பரிய நெல் ரகங்கள் இதுபோன்று நம்ம மண்ணுலவெளைஞ்சிட்டு இருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும் அமெரிக்காவுக்கும் பல வெளிநாடுகளுக்கும் கொண்டுபோய்ட்டாங்க.

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். பாரம்பரிய நெல் வகைகள் என்னென்ன பலன்களைத் தரும் என்று இங்கு பார்க்கலாம்

நெல் வகை புகைப்படம்
கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

மாப்பிள்ளை சம்பா நெல்
பூங்கார் அரிசி
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

பூங்கார் அரிசி
காட்டுயானம் அரிசி
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

காட்டுயானம் அரிசி
கருத்தக்கார் அரிசி
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

கருத்தக்கார் அரிசி
காலாநமக் அரிசி
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

காலாநமக் நெல்
மூங்கில் அரிசி
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

பெ.சூரிய பிரகாஷ்,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்