1500 கிலோ குட்கா பறிமுதல் மேற்குவங்கத்தை சார்ந்த 5 பேர் கைது.

0
250

[1/31/2022] செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து போதைகுட்கா தயாரித்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 5 பேர் கைது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் குட்கா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 பேரையும் சுமார் 1500 கிலோ மதிப்புடைய போதைப் பொருள்களையும் அவற்றை தயாரிக்க பயன்படுத்திய அரவை இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர் முறுக்கு முறுக்கு மட்டும் தட்டை வியாபாரம் செய்வதாக சொல்லி வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்கள் தயாரித்து வந்துள்ளனர். இதுபோன்று வடமாநிலங்களில் இருந்து வரும் நபர்களை அவர்களுடைய ஆதாரை பெற்றுக்கொண்டு இவர்களுக்கு குற்றப்பின்னணி தொடர்பு உள்ளதா என்பதை காவல்துறையினர் விசாரித்து அறிந்த பின்பே இதுபோன்ற வீடு வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

பெ. சூர்யா,நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்