இந்தியாவின் விமானப்படையில் புதியதாக 16 பெண் விமானிகள்

0
205

போர் விமானங்களை பெண்கள் இயக்குவதில் இனிமேல் பரிசோதனை அல்ல நடைமுறை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தின் பெண் அதிகாரிகளின் நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இதனை அடுத்து பெண் விமானிகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்திய போர் விமானங்களை இயக்கும் முதல் 3 பெண் விமானிகள்

வரும் ஜூன் மாதத்தில் இந்த பயிற்சி நிறைவு பெறுகிறது. பயிற்சியில் ஈடுபட்ட 16 பெண் விமானிகளும் பரிசோதனை காலத்தில் வெற்றி பெற்றுள்ளனர். விரைவில் பாதுகாப்புத்துறை பொறுப்புகளில் பெண்கள் பெருமளவில் நியமனம் செய்யப்படுவார்கள். பரிசோதனை முறையில் மத்திய அரசு 2015.ஆம் ஆண்டு பெண் விமானிகள் நியமனத்தை அறிமுகம் செய்தது. தற்போது நடைமுறைக்கு வந்து விட்டதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்