பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0
118

ஜன.11 முதல் 13 வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும், பிற ஊர்களில் இருந்து ஜன.11 முதல் 13 வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 5 இடங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல பேருந்துகள் இயக்கப்படும் ;கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லியில் இருந்து பேருந்துகள் இயக்கம், கோயம்பேட்டில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்து சென்னை திரும்ப ஜன.16 முதல் 18 வரை 3,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் செய்யலாம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 11ம் தேதி முதல் சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும்,

  • பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பேருந்துகளுக்கு

tnstc.in,

redbus.in,

paytm.com,

busindia.com,

tnstc official app ( google app )

அல்லது பேருந்து நிலையங்களில் இருக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள முன்பதிவு மையம் ( TNSTC ) சென்று நேரடியாக முன்பதிவு செய்யலாம்.

இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்

  • பொங்கல் நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கீழ்கண்ட புகார் எண்ணிற்கு புகார் பதிவிடலாம்.

1800 425 6151 ,

044 24749002

ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்