கூடங்குளம் அருகே இடி தாக்கி 19 ஆடுகள் பரிதாப பலி

0
145

திருவம்பலபுரம், நடுத்தெருவைச்சேர்ந்த சுயம்பு கோனார் மகன் பலவேசம் என்பவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து பிழைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று 26/10/21ம் தேதி சுமார் 5 மணியளவில் கனக்கன்குளம் ஊருக்கு மேல்புறம் உள்ள தோட்டக்காட்டில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இடி,மின்னல் தாக்கி சுமார் 19 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது.இதுகுறித்து அவர் மிகவும் கவலையடைந்து அரசிடம் இயற்கை நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கவுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்