பாளை அருகே சாலை விபத்து 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்

0
201

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தின் முன்பாக வேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் இரண்டு கார்களும் ஓட்டி வந்தவர்கள் அதிஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இரண்டு கார்கள் வேகமாக மோதியதால் அவை மோதியவுடன் சாலைக்கு குறுக்காக திரும்பி நின்றது.

விபத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை மேடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு, நாராயணன் அவர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சம்பவ இடத்தில் நின்று போக்குவரத்தை சீர் செய்தார். கார்கள் மோதியதில் குறுக்காக நின்றதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் குவிந்து நின்று வேடிக்கை பார்த்தனர். அவர்களையும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாராயனன் மற்றும் பெண் காவலர்கள் அவருடன் பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு போக்குவரத்தை சரிசெய்தனர்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்