நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்னும் சற்று நேரத்தில்…

0
334

(31-01-2022) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்க இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற இரு அவைகளின் பொதுவிலும் உரையாற்ற உள்ளார். பஞ்சாப் ,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில்கத்தில் சிறிது நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர். நரேந்திர மோடி ,பல முக்கியமான விஷயங்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளன எனவே எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பைத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்..
தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்