“மரியுபோல் நகரில் மட்டும் பொதுமக்கள் 2187 பேர் உயிரிழப்பு” – உக்ரைன் அறிவிப்பு.

0
328

உக்ரைன் மீது ரஷ்யா நாளுக்கு நாள் தாக்குதலை அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில், உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் மட்டும் ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் 2187 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரஷ்யாவானது உக்ரைன் நாட்டு நகரங்களைக் குறிவைத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்ற சூழலில் மரியுபோல் உட்பட பல்வேறு நகரங்களில் பொது மக்கள் மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் எதுவும் இன்றி தவித்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

File Picture

இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக களமாடிய வெளிநாட்டு வீரர்கள் 180 பேர் போரில் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கிடையே போரை நிறுத்துவது தொடர்பான முடிவெடுக்க ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இன்று காலை காணொலிக் காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்