நாகை காரைக்கால் மீனவர்கள் 22 பேர் விடுதலை – நீதிமன்றம் உத்தரவு

0
153

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடலோரக் காவல் படையினரால் நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சிறையில் இருந்த மீனவர்கள் சிறைக் காவல் முடிந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு அவர்களை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்