22 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

0
131

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரைக் கைது செய்துள்ளனர் இலங்கைக் கடற்படையினர் . நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தின் மூலம் வற்புறுத்தியுள்ள இச்சூழ்நிலையில் 22 தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்