பாலியல் தொல்லையில் 3 பேர் கைது

0
180

சேலம் மாநகராட்சி செவ்வாய்பேட்டையில் ஸ்ரீ குப்தா ஸ்வீட்ஸ் கடையில் வேலை பார்த்து வருபவர் 30 வயதுடைய திருமணமாகாத பெண் இவரது குடும்ப வறுமை காரணமாக இவர் சுமார் ஒரு வருடங்களாக இந்த கடையில் வேலை பார்த்து வருகிறார். கடையில் உட்பகுதியில் உள்ள அறையில் சென்று பொருட்களை எடுக்க போகும் போதும் வரும்போதும் கடையில் வேலை பார்க்கும் சிலர் இவரிடம் தவறான முறையில் இடித்துள்ளனர். அதை அந்த பெண்ணை கண்டிக்கவே அவர்கள் கண்டும் காணாதது போல் இருந்து உள்ளனர். இந்த மூவரும் தொடர்ந்து 3 மாதங்களாக இவ்வாறு இடிப்பது, உரசுவது என்று தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளான அந்த பெண் கடையின் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார், அதற்கு கடையின் உரிமையாளர் இதை நீ வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் நான் அவர்களை கண்டித்து விடுகிறேன் என வாக்குறுதி கொடுத்து அந்த பெண்ணை அனுப்பிவிட்டார்.

ஆனால் அந்த கடையின் சக ஊழியர்களான அந்த 3 நபர்களும் தொடர்ச்சியாக மீண்டும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாசமாக பேசியும் மீண்டும் இடிப்பது உரசுவது என தொடர்ச்சியாக அந்த பெண்ணை பாலியல் தொல்லையை கொடுத்து வந்துள்ளனர். மனம் நொந்துபோன அந்த பெண் தனது பெற்றோர்களை அழைத்துக்கொண்டு காவல் ஆணையர் நஞ்முல் ஹவுடா புகார் அளித்தார்.(காவல்துறையினர் குப்தா சீட்டில் பணிபுரியும் அந்த இடித்து பெண்ணிற்கு ஆபாச தொல்லை கொடுத்த மூன்று நபர்களையும் அழைத்து விசாரித்து நடந்த சம்பவங்கள் உண்மையா என கேட்டதற்கு அவர்கள் அப்படி இங்கு எதுவும் நடக்கவில்லை நாங்கள் அவர்களுக்கு எந்த விதமான பாலியல் தொல்லையும் அளிக்கவில்லை என்று உறுதிபடக் கூறி விட்டனர். ஸ்ரீ குப்தா ஸ்வீட்ஸ் இனிப்புக் கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.காவலர்கள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்தப் பெண்ணிற்கு தொடர்ச்சியாக இவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்கள் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்படி இடி வீரர்களான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், தஞ்சாவூர் வன்மீகநாதன், புதுக்கோட்டை கணேசன் ஆகிய 3 பேரையும் படித்து செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட காவலர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தாமாக முன்வந்து காவல் நிலையத்தை அணுகி தைரியமாக புகார் மனுவினை அளித்ததை காவலர்கள் பாராட்டி எப்பொழுதும் இப்படி தைரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தி சென்றார்கள்.

பெ. சூர்யா நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்