டெல்லியில் 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைப்பு – அமித்ஷா

0
194

டெல்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளை ஒன்றாக இணைக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார். அதன்படி டெல்லி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாநகராட்சிகள் ஒன்றாக ஒரே மாநகராட்சியாக செயல்பட இம்மசோதா வழிவகை செய்கிறது.

மேலும் புது டில்லி மாநகராட்சி மட்டும் தனியாக செயல்படும் எனவும் மற்ற மூன்று மாநகராட்சிகலும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே மாநகராட்சியாக செயல்படும் எனவும் அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடைபெறவிருந்த மாநகராட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படும் சூழல் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்