மங்களூர்-சென்னை செல்லும் ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு

0
217

கோவை எட்டிமடை பகுதியில் ரயிலில் அடிபட்டு 3 யானைகள் பலி சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைவு, கோவை மாவட்டம் நவக்கரை அருகே மங்களூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு, சம்பவ இடத்தில் வனத்துறையினரும், ரயில்வே துறையினரும் விசாரணை.

கோவையில் ரயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் யானைகளின் உடல் அருகே கற்பூரம் பற்ற வைத்து யானைகளின் ஆன்மா சாந்தியடைய கிராம மக்கள் வழிபாடு, கோவை நவகரை அருகே மூன்று யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவத்தில் 3 யானைகளுக்கும் பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர், மேலும் இறந்தது மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை) இரண்டு பெண் யானைகள் என்பது தெரியவந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்