இந்தியாவின் ஏற்றுமதி “30 லட்சம் கோடியை எட்டி சாதனை”- பிரதமர் மோடி வாழ்த்து

0
112

இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு இதுவரை இல்லாத அளவாக ரூபாய் 30 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 30 லட்சம் கோடி இலக்கை எட்டி தற்போது இந்தியா சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இது சுயசார்பு இந்தியாவின் மைல்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த சாதனையை அடைவதற்காக உழைத்த நாட்டின் விவசாயிகள் , நெசவாளர்கள் , சிறுகுறு நிறுவனத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் , உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்