சிறுத்தை நடமாட்டம் பீதியில் கோவை மக்கள்

0
130

[ 1/19/2022] கோவை மதுக்கரை எல்லையை ஒட்டிய சுகுணாபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்களால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள தனியார் குடோன் ஒன்றில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க மூண்று நாட்களாக வனத்துறையினர் முயன்று வருகின்றனர். இதனையொட்டி வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுத்தை சிக்கவில்லை மூண்று நாட்களாக சிறுத்தையை தேடி வந்த நிலையில் குனியமுத்தூர், மதுக்கரை, பி.கே புதூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை சார்ந்த காவலர்கள் மூண்று இடங்களில் கூண்டுகளை வைத்து சிறுத்தை வரக்கூடிய மற்ற வழிகளை அடைத்து அவற்றினைப் பிடித்து வனப்பகுதிக்குள் சென்று விட முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சிறுத்தை கூண்டிற்குள் சிக்கவில்லை. மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக ஐந்து இடங்களில் நைட் விஷன் என்று சொல்லக்கூடிய இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கூடிய அளவில் கேமராக்களை பொருத்தி அவற்றின் மூலமாகவும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பதிவுகளையும் நேற்று வனத்துறையினர் வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று பி.கே புதூர் பகுதியில் இருப்பதாக தகவல் வந்ததால் அங்குசென்று அவற்றை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்