டிவிஎஸ் வாகனம் 86000 பழுதுநீக்க 58000, அதிர்ந்துபோன பெண் பெட்ரோல் கேனை கையில் வைத்து தர்ணா

0
255


திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொத்தோனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா இவர் டிவிஎஸ் ஜூபிடர் வாகனத்தை கடந்த ஜூன் மாதம் 2020ஆம் ஆண்டு டிவிஎஸ் டீலரான இதயம் ஏஜென்சி என்ற நிறுவனத்தில் வாங்கி உள்ளார் .பின்பு இவரது நண்பரான பரூக் மொஹம்மது என்பவர் என்பவர் இவரிடம் டிவிஎஸ் வாகனத்தை இரவல் வாங்கிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஒட்டன்சத்திரம் அருகே எதிரே வந்த ஸ்ப்ளெண்டர் வண்டியுடன் மோதியதில் பரூக் மொஹம்மது சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனையடுத்து ஷேக் அப்துல்லாவின் மனைவி ஆயிஷா பானு இதயம் ஏஜென்சி நிறுவனத்தை அணுகி சென்று இவது வாகனம் லேசான சேதமடைந்திருந்தது. அந்த வாகனத்தை அவர்களிடம் பழுது நீக்குவதற்காக ஆயிஷா பானு கொடுத்திருக்கிறார்.

சிறிது காலம் கழித்து வாகனத்தை கேட்டு சென்ற பொழுது இதயம் ஏஜென்சி சார்ந்தவர்கள் வண்டிக்கு இன்னும் மாற்ற வேண்டிய சில சாமான்கள் வரவில்லை அவை ஆர்டர் கொடுத்து இருக்கிறோம், வந்தவுடன் வண்டி வேலையை முடித்து தருகிறோம் என்று கூறி இவர்களை பல மாதங்களாக அழைத்துள்ளனர். சுமார் எட்டு மாதங்கள் கழித்து வாகன விபத்தில் இறந்துபோன பரூக் மொஹம்மது அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் லேசான சேதம் அடைந்த வண்டி தானே அவற்றை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று கூறியதால் ஆயிஷா பானு டிவிஎஸ்

இதயம் ஏஜென்சியிடம் சென்று நீங்கள் வண்டி வேலை பார்த்து தர வேண்டாம் அப்படியே கொடுங்கள் நான் வேலை பார்த்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார். உடனே இதயம் ஏஜென்சி சேர்ந்த ஊழியர்கள் நாங்கள் வண்டி வேலை பார்த்து விட்டோம் அதில் நாளை தருகிறோம் வாருங்கள் என்று சொல்லி அனுப்பியுள்ளனர். பிறகு ஆயிஷா பானு நேரில் சென்று வாகனத்தை கேட்ட பொழுது உங்கள் வாகனம் முழுவதுமாக வேலை பார்த்தாகிவிட்டது அதற்கான பில் 58000 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். சிறிதான காயங்களுடன் வண்டி வாகனத்தை வேலைக்கு விட்ட ஆயிஷா பானு அதிர்ச்சி அடைந்து 58 ஆயிரமாக இவ்வளவு பில் ஏன் வந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஒரு நீளமான லிஸ்ட் ஒன்றை கொடுத்தனர் அதில் சர்வீஸ் சார்ஜ் சமமானது என பலவாறு எழுதி இருந்தார்கள். இவற்றை கண்டு அதிர்ந்துபோன ஆயிஷா பானு உடனடியாக அவற்றை கட்ட முடியாது என்னால் என்று சொல்லி இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியபோது, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 20,000 மட்டுமே பெற முடிந்தது.

ஆயிஷா பானு உடனடியாக இதயம் ஏஜென்சி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பெட்ரோல் கேனுடன் வாயிலில் அமர்ந்து ஒரு மணி நேரமாக தர்ணா செய்த ஆயிஷா பானுவை தகவலறிந்து வந்த காவலர்கள் சமாதானம் கூறி நீங்கள் நீதிமன்றம் மூலமாக இதற்கு தீர்வு காணுங்கள் உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பெ . சூர்யா நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்