பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்- வானதி சீனிவாசன் கோரிக்கை

0
217

அரியலூர் ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா மதமாற்றம் செய்ய துன்புறுத்தியதால் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்பு பள்ளி நிர்வாகத்தால் சிகிச்சை செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட சில நாட்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை கிளப்பி சமூக ஊடகங்களில் மதமாற்றத்திற்கு தூண்டிய பள்ளியை மூட கோரியும் நடவடிக்கை எடுக்க கோரியும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன இதனை மையமாக வைத்து பல அரசியல் பிரமுகர்களும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பாஜக தமிழ் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களும் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார். இந்நிலையில் அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

பெ. சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்