செய்யாறு அருகே மினிவேனில் ரகசியஅறை அமைத்து 350 கிலோ குட்கா பதுக்கல்!: 3 பேரை கைது செய்து போலீசார்

0
237

திருவண்ணாமலை: செய்யாறு அருகே மினி வேனில் நூதன முறையில் பதுக்கி கொண்டுசெல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், பெங்களூருவில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் பிரத்யேகமாக தனி அறைகள் அமைக்கப்பட்டு அதற்குள் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 350 கிலோ குட்கா மூட்டைகள் உள்பட வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஹரிகரன், விஜயகுமார், சாதிக் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் கஞ்சா ஒழிப்பு 2.0 ஆப்ரேஷன் மூலம் போலீசார் அதிரடி சொதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்