38 வயது தனியார் பள்ளி ஆசிரியருக்கு மெடிக்கல் சீட்!

0
248

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அருகே, 38 வயதான தனியார் பள்ளி ஆசிரியருக்கு, மெடிக்கல் சீட் கிடைத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் நொச்சிப்பட்டி அடுத்த பெரியபொம்பட்டியை சேர்ந்தவர் வாசுதேவன், 38; எம்.எஸ்சி., எம்.எட்., பட்டதாரியான இவர், காரப்பட்டிலுள்ள தனியார் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மனைவி, 7 வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனர். ‘நீட்’ தேர்வு எழுதி வாசுதேவன் வெற்றி பெற்றார். அவருக்கு கிருஷ்ணகிரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது. அவருக்கு சேர்க்கை ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று வழங்கினார்.வாசுதேவன் கூறுகையில், ”என் தந்தையும், தம்பியும் கட்டட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். மருத்துவம் படித்து முடித்து, கிராம மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன்,” என்றார்.


ஆ.அருண்பாண்டியன் ,
மதுரை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்