கோயில்பட்டியில் பட்டாசுஆலையில் வெடிவிபத்து- 4 பேர் பலி

0
225

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் துறையூர்-ல் உள்ள செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் என்ற தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒரு அறையில் பட்டாசுகளை தயார் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அறை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு பேரும் சம்பவ இடத்தில் பலியாகினர். தங்கவேல். கண்ணன், ராமன், ஜெயராஜ், ஆகிய 4 பேர் சம்பவ இடத் இடத்திலேயே உயிரிழந்தனர்.

வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை குறித்து காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்