4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம். மோட்டார் வாகன சட்டத்தில் புதிய விதிமுறைகள் அமல்..!

0
113

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் தலை கவசம் அணிய வேண்டும் என்ற விதி இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கடைபிடிப்பது கிடையாது. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இருசக்கர வாகனங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளை அழைத்துச்செல்ல மோட்டார் வாகன சட்டத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அதிரடியாக கொண்டு வந்துள்ளது.

Motor vehicles Act:அலர்ட் மக்களே!! 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மட்  கட்டாயம்..!அறிவித்தது மத்திய அரசு | the ministry of road transport and  highways

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் தலை கவசம் அணிய வேண்டும் என்ற விதி இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கடைபிடிப்பது கிடையாது. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கி வருகிறது. இதன்படி 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது தலைகவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2021ம் அக்டோபர் 21ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், இரண்டு சட்டத்திருத்தங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமஇருசக்கர வாகனத்தில் 4 வயது குழந்தையுடன் செல்லும் போது அதிகபட்ச வேகத்தை நாம் 40 கிலோ மீட்டருக்குள் நிர்ணயிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு குறித்த வரைவு விதிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

9 மாதம் முதல் நான்கு வயது வரை குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் தலைக்கவசம் அணிந்திருப்பது உறுதி செய்ய வேண்டும்.

4 வயது குழந்தையை ஓட்டுநர் உடன் இணைத்து இருக்கும்படி பெல்ட் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு விதிகளை ஏதேனும் திருத்தம் அல்லது உடன்பாடு இல்லாதிருப்பின் அது குறித்து மக்கள் தெரிவிக்கலாம் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் வரும் நாட்களில் குழந்தைகளுக்கு ஹெல்மட் மற்றும் பெல்ட் ஆகியவை இருசக்கர வாகனத்தில் கட்டாயம் இருக்கும் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்