உக்ரைனில் தவித்த 5 தமிழர்கள் மீட்பு.

0
140

உக்ரைன் நாட்டில் உள்ள 5 தமிழர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தீவிரமாக போர் தொடுத்துள்ள இப்பதற்றமான சூழ்நிலையில் உக்ரைனில் வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக இந்தியாவிற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.


அவ்வாறு முதற்கட்டமாக உக்ரைனிலிருந்து சுமார் 470 இந்தியர்கள் ருமேனியா வழியாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் ஐந்து பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் மும்பைக்கு அழைத்து வர தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்