ரஷ்யா, உக்ரேன் பெலாரஸ்-இல் நிபந்தனையற்ற பேச்சுவாத்தை

0
171

ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்து நிலையில் ஐந்து நாளாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதில் கீவ் நகரின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக அறிவித்தார்.

கீவ் நகரினை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் கடுமையாக சண்டைட்டபோதும் கீவ் நகரில் சுற்றியுள்ள பகுதிகளில் பாதைகளை குண்டு வைத்து சேதப்படுத்தியும், பாலங்களை உடைத்தும் ரஷ்யாவீரர்களை வரவிடாமல் தடுத்துவிட்டது.இதனால் கீவ் நகரை கைப்பற்றும் முயற்சி ரஷ்ய ராணுவம் தோல்வி அடைந்தது.


உக்ரைனுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் ஸ்வீடன் மற்றும் சில நாடுகள் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் அனுப்பி உள்ளது. மேலும் நேற்று நேட்டோ கூட்டமைப்பு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக அறிவித்தது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பு சார்பில் உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு சாதனங்கள் பீரங்கி அழிப்பு ஆயுதம் வழங்க முடிவு.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் சண்டையிட விரும்பினால் சிறையில் உள்ள ராணுவ அனுபவம் உள்ள கைதிகளுக்கு விடுதலை என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளது.

Ukraine's most dangerous prisoners escape as shell hits Donetsk jail |  Daily Mail Online

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் ஒத்துவந்த காரணத்தினால் இன்று பெலாரசில் பேச்சுவார்த்தை ஆரம்பமாக உள்ளது.

உக்ரைன் ரஷ்ய பிரதிநிதிகள் குழுக்கள் எல்லைக்கு வந்தடைந்துள்ளன. இன்னும் சற்று நேரத்தில் இரு நாட்டு குழுக்களுமக்குமிடையே பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆகும்.

இதில் ரஷ்யா தரப்பில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது. அதேபோல் உக்ரைன் நாட்டின் தரப்பிலும் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வருகிறது.

விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில் என்று அதிபர் மாளிகையை செய்தி வெளியிட்டுள்ளது இந்திய நேரப்படி சுமார் மூன்று முப்பது மணி அளவில் பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்