சீனாவின் 54 மொபைல் செயலிகளுக்குத் தடை-இந்தியா அதிரடி

0
225

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் எனக் கருதி சீனாவைச் சேர்ந்த மேலும் 54 மொபைல் செயல்களுக்கு இந்தியா தடை விதிக்க உள்ளது. பியூட்டி கேமரா, விவா வீடியோ எடிட்டர் உள்ளிட்ட 54 செயலிகளுக்குத் தடை விதிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எற்கனவே டிக்டாக், வி சாட், ஹலோ போன்ற செயல்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்திருந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் மேலும் 118 மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தற்போது 54 சீன செயலிகள் தடை செய்யப்பட உள்ளன. சீனாவைச் சேர்ந்த செயலிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என உளவுத்துறை அமைப்புகள் மத்திய அரசிடம் கூறியிருந்ததன. அதன்படி இத்தடையானது பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக இந்தியா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்