இலங்கையிலிருந்து வந்த 6 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

0
304

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றத்தால் “பிரட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எரித்து இலங்கை அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்”. சீனாவிடம் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் “இலங்கைக்கு இந்தியா சில நாட்களுக்கு முன்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது” குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனுஷ்கோடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு குழந்தை உட்பட 6 பேரிடம் இந்தியக் கடலோர காவல் படையினர் விசாரணை செய்ததில் அவர்கள் இலங்கையிலிருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக இந்தியா வந்து தஞ்சம் அடைந்தது தெரியவந்துள்ளது.கடலோரக் காவல் படையினர் அவர்களுக்கு உணவளித்து அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து இன்னும் ஏராளமானோர் பொருளாதார நெருக்கடியால் இந்தியா வந்து தஞ்சமடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்