பெரு நாட்டில் விமான விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

0
190

பெரு நாட்டில் பயணிகள் விமானம் தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கி எரிந்ததில் 7 பேர் மரணம் அடைந்து விட்டனர்.

அந்நாட்டின் பிரபலமமான தொல்பொருள்ஆய்வுதளமான நக்காலைட்ஸ் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர், ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்று அந்நாட்டின் விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதனால் விபத்து நடந்தது என்ற காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பறவைகள் எதும் மோதி விமானம் தீப்பற்றியதா அல்லது யாரேனும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்களா அல்லது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு தீ பற்றியதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

பெ.சூர்யா நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்