பிரதமர் மோடி அவர்களின் 71வது பிறந்த நாள் விழா- தமிழகத்தில் ‘தேவேந்திர சேனா’ அமைப்பின் பங்கு

0
345

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்த நாள் விழாவினை மிக விமர்சையாக கொண்டாட , ‘தேவேந்திர சேனா’ அமைப்பு கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது !

அதன்படி செப்டம்பர் 17 ஆன இன்று தென்னகத்தின் தென் திருப்பதியை வணங்கி

‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதற்கிணங்க ஆழ்வார்திருநகரியில் எம்பெருமான் பாதம் தொட்டு தனது முதல் பயணத்தை இனிதே தொடங்கியது கல்வியாளர் அ.குணசேகரன் தலைமையிலான குழு !

ஆழ்வார்திருநகரி

ஆழ்வார்திருநகரியில் சொல்லொன்றும் செயலொன்றும் செய்யும் தலைவர்கள் மத்தியில் தன்னலமில்லா தானைத்தலைவர் பிரதமர் மோடி அவர்களின் பெயரில் பூஜைகள் செய்யப்பட்டது, நதியை வணங்குதல் நடந்தேறியது, இனிப்புகள் வழங்கப்பட்டது ,சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது, மேலும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது ,ஆதிநாதர் அழகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நரேந்திரர் பெயரில் தேவேந்திரரால் பிரதமர் மோடி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

புதுக்குடி

அடுத்ததாக ‘கல்வி கண் போன்றது காலம் பொன் போன்றது’ என்பதுணர்ந்த கல்வியாளர் அ.குணசேகர் அவர்கள் தலைமையிலான குழு புதுக்குடி கிராமம் நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.
அங்கு G.ஸ்டாலின் LLB அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்திருந்தார்.

இந்நன்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் ,பாஜக உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் .மேளம் முழங்க பிரதமர் அவர்களுக்கு வானளாவிய சப்தங்களுடன் வாழ்த்து தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது ,அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி , ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.

தென்திருப்பேரை

ஏறும் போரும் எங்கள் உயிர் என்பதற்கிணங்க பசுவை வணங்கி அங்கிருந்து கல்வியாளர் அ.குணசேகர் தலைமையிலான குழு தென்திருப்பேரை நோக்கி தனது பயணத்தை சீறிய காளை வேகத்தில் தொடங்கியது. அங்கு இளைஞர்கள் கல்வியாளர் திரு அ.குணசேகர் அவர்களை பொன்னாடை போர்த்தி மேளதாளம் முழங்க வரவேற்றார்கள் !


அதன் பின்னர் கைலாசநாதர் திருக்கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, அன்னதானம் வழங்கப்பட்டது, சர்க்கரைப் பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

‘இன்றளவு உண்டோ என்றும் ? என்பதுபோல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாரிச்சாமி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். இவர்களுடன் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ,பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் ,பெண்கள் என பல தரப்பிலும் கலந்து கொண்டு சிறப்பாக விழாவினில் பங்கெடுத்து சிறப்பித்து சென்றனர்.

விழா முடிந்த பின்னர் அங்கிருந்து ‘சே-மானை கண்ட சீமான்போல்’ கல்வியாளர் திரு அ.குணசேகரன் தலைமையிலான குழு புளியங்குளம் நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

கல்வியாளர் குணசேகரன் தலைமையிலான குழுவை , ‘அரிதிற்கிடைத்த கனிபோல’ பொது மக்களும் இளைஞர்களும் சிறப்பாக மேளதாளத்துடன் வரவேற்றனர், ஊர் பெரியவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவம் செலுத்தினர், மரம் நடுதல் தொடங்கி வைக்கப்பட்டது,
புளியங்குளத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் கரகோஷமிட்டனர்.

புளியங்குளம்

அதன் பின்னர் சிறப்பு வழிபாடு நரேந்திரமோடி அவர்களின் பெயரில் செய்யப்பட்டது, அன்னதானமும் வழங்கப்பட்டது, மரம் நடுதல் மற்றும் ,இனிப்புகள் வழங்குதலோடு குழு அடுத்த நகர்வுக்கு தயாரானது.

புளியங்குளத்தில் இருந்து நெல்லைச்சீமை நோக்கி திரு அ.குணசேகரன் தலைமையிலான குழு தனது பொற்பாதங்களை வண்ணாரப்பேட்டை நோக்கி செலுத்தலாயிற்று.

அதன் பின்னர் கல்வியாளர் அ.குணசேகரன் அவர்கள் தலைமையிலான குழு தாமிரபரணி ஆற்றோரமுள்ள வண்ணாரப்பேட்டை பேராட்சி யம்மன் கோவிலுக்கு தனது பயணத்தை தொடங்கியது, அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல், மரம் நடுதல், நிகழ்வு நடைபெற்றது பிரதமர் பெயரில் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.

வண்ணார்பேட்டை

அங்கிருந்து வண்ணார்பேட்டை ஆற்றை நோக்கி குழுவினரின் நகர்வு தொடங்கியது, நீரில் நின்று சூரியனை வணங்கி அதன் சாட்சியாக
நதியை வணங்குதல், மரம் நடுதல் ,அன்னதானம் வழங்குதல் ,போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சதீஷ்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் ,இதில் ஊர் பொதுமக்களும் பெண்களும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கொக்கிரக்குளம்

அதன் பின்னர் கொக்கிரக்குளம் நோக்கி பயணிக்கலாயினர், அருள்மிகு செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது ,அங்கிருந்து ஆற்றின் கரையில் பிரதமர் மோடி அவர்களுக்கு, நமஸ்காரங்கள் செய்யப்பட்டு, பூஜை புணஸ்காரங்களுடன் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

கருப்பந்துறை

அங்கிங்கெனாதபடி ஆனந்தமாய் அடுத்த நகர்வு கருப்பந்துறையை நோக்கி சென்றது. ஆற்றில் பிரதமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,கூடியிருந்தவர்களால் பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு ,இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்கப்பட்டி

அங்கிருந்து குழு நெல்லைச் சீமையை விட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பக்கபட்டி கிராமத்தை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.

அங்கு வானளாவிய தோரணங்களுடன், இளைஞர்கள் மேளதாளம் முழங்க கல்வியாளர் அ.குணசேகர் அவர்களை வரவேற்றார்கள். பிரதமர் மோடி அவர்களுக்கு சிறப்பான வாழ்த்து பதாதைகளையும் அங்கே வைத்திருந்தார்கள், ஊரின் முக்கியஸ்தர்கள் சிலர் கல்வியாளர் குணசேகர் அவர்களை கௌரவித்து பொன்னாடை போர்த்தினார்கள்.

அங்குள்ள கோவிலில் சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு ,அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது ,பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது ,இனிப்பு வழங்குதல் ,மற்றும் மரம் நடுதல் ,வெகு சிறப்பாக நடைபெற்றது.

முருகன்புரம்

அங்கிருந்து பிரியாவிடை பெற்று ‘தேவேந்திர சேனா’ குழு தனது பயணத்தை முருகன்புரம் நோக்கி செலுத்தியது.


முருகன்புரத்தை வந்தடைந்த கல்வியாளர் அ.குணசேகர் தலைமையிலான குழுவை, ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மேளதாளம் முழங்க வரவேற்றனர்.

கிராம பூசாரி முருகனை வேண்டி கோவிலில் பூஜை செய்து திருநீர் பூச்சுடன் வரவேற்றார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர் ,பிரதமர் மோடி அவர்களின் பெயரில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.
சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு ,இனிப்புகள் பரிமாறப்பட்டன.

இளைஞர்கள் பலர் கல்வியாளர் குணசேகரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்கள், குழு சார்பாக ஊர் பெரியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இந்நகர்வின் பின்னர் கல்வியாளர் அ.குணசேகர் தலைமையிலான குழு ,புளியங்கொட்டாரம் கிராமத்தை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.

கல்வியாளர் அ.குணசேகர் தலைமையிலான குழுவை, வரவேற்ற இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

இளைஞர்கள் உற்சாகமாக காணப்பட்டார்கள், கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு ,பிரதமருக்கு வாழ்த்துக்களை ஊர் பொதுமக்கள் சார்பில் பரைசாற்றினர்; மற்றும் இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

விழாவின் முடிவில் கல்வியாளர் அ. குணசேகர் அவர்கள் தமது பணி ,இத்தோடு முடியப்போவதில்லை ‘இன்று போய் நாளை வா ‘ என்பதுபோல் இதுபோன்று வருடாவருடமும் எம்பணி தொடரும் என அனைவரிடத்திலும் உறுதிபூண்டு பிரியாவிடைபெற்று தற்சமயம் பயணத்தை முடித்து கொண்டார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்