மாநில முதல்வர்களுடன் பாரத பிரதமர் காணொளி வாயிலாக ஆலோசனை

0
64

பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதலமைச்சருடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்கிரான் வைரஸ் பரவல் அதிவேகமாக நாடு முழுவதும் பரவி வரும் சூழ்நிலையில் தடுப்பு முன்னெடுப்பு நடவடிக்கையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதல்வர் களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தஞ்சையை தேர் தீ விபத்தை காண்பதற்காக முதலமைச்சர் அங்கு சென்று உள்ளதால்,
தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்னன் மற்றும் முதன்மை செயலர் இந்த காணொளியை கூட்டத்தில் பங்கு பெற்றுவருகிறார்கள்.

அந்தந்த மாநிலங்கள் சார்ந்து பேசக்கூடியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி கேம்பு போன்றவற்றை அமைப்பது தொடர்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவதற்காக வாய்ப்புகள் இருக்கிறது.

மாநில அரசு எல்லைபகுதி நிலைகளையும் மாவட்ட எல்லைகளையும் தீவிரமாக கண்காணித்து கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தரப்பிலிருந்து வலியுறுத்திவருகிறது.

கொரோனாவின் அடுத்த அலை வராமலிருக்க அதற்கான தடுப்பு முறைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தமிழகம் சார்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் முதன்மை செயலர் ஆகியோர் தடுப்பு நடவடிக்கை குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்க இருக்கிறார்கள்.

இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பாக்க முடியாது.

6 முதல் 12 வயது உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறார்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க கோரி மோடி வலியுறுத்தினார். வாட் வரியை குறைக்காததால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு என்று தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போல் பல மாநிலங்களில் மாநில அரசுகள் குறைக்கவில்லை பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்