சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து விழுந்து 3 வயது சிறுமி மரணம்

0
108

சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வனிதா என்பவர் இந்த கட்டடத்தில் உள்ள ஏழாவது மாடியில் வசித்து வருகிறார்.

இவரது கணவர் சுமார் 1 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8 மாத காலமாக தனது தம்பி மற்றும் தாயாருடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வனிதா வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் சோபாவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது 7ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தாய் வனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் தூக்கிச் சென்றனர்.

image

குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்