கனமழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை

0
153

கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத் பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக பெய்து வருகின்றது. கடந்த 4 தினங்களாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு விஷ்ணு அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்